பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை ஊர் காவல் படையில் வேலைவாய்ப்பு 2025

 


Police
Police 
சென்னை ஊர் காவல் படை கடலோர பாதுகாப்புப் படையில் ஊர்க்காவல் படை புதிய பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கீழ்காணும் தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.


1. எந்தக் குற்றப் பின்னணியும் இல்லாத நன்னடத்தை உள்ளவராக இருத்தல் வேண்டும். 

2. மீனவராக இருக்க வேண்டும். 

[மீனவர் அடையாள அட்டையை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரியிடம் பெற்றிருக்க வேண்டும்] 

3. சென்னை பெருநகர கடலோர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும் மற்றும் மெரினா கடற்கரை காவல் நிலையத்திற்கு 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

4. 01-08-2025 அன்று 18 வயதிற்கு மேல் உள்ளவராகவும் 50 வயதிற்கு குறைவாகவும் இருக்க வேண்டும். 

5. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம். 

5. கடல் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். 

மேற்கண்ட தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்ச்சி செய்யப்படும் ஊர் காவல் படையினருக்கு 45 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிந்த பிறகு கடலோர காவல் பாதுகாப்பு படையுடன் இணைந்து பணிபுரிய மெரினா கடற்கரை காவல் நிலையத்திற்கு அனுப்பப்படுவார்கள்.

இரவு ரோந்து பணி மற்றும் பகல் ரோந்து பணிக்கு ரூபாய் 560/- சிறப்புப்படியாக வழங்கப்படும்.

https://www.uyiratral.com/2024/07/kneepain.html

தகுதி உடையவர்கள் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 30-9- 2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரில் கொடுக்கலாம் அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: 

சென்னை பெருநகர ஊர்க்காவல் படை அலுவலகம் 

சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை சென்னை -600015

தொலைபேசி- 9566776222, 9498135373

Comments