2026 சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் கருத்துக்கணிப்பு வெளியீடு.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
திமுக கூட்டணியில்
காங்கிரஸ்
விடுதலை சிறுத்தை கட்சிகள்
கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மக்கள் நீதி மையம்
மதிமுக
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனிதநேய மக்கள் கட்சி
ஆகிய கட்சிகள் கூட்டணியில் இணைந்து செயல்படுவது உறுதியாகி உள்ளது.
மற்றொரு கூட்டணியாக
அதிமுக
பாஜக
இணைந்து 2026 சட்டமன்றத்
தொகுதியில் களம் காண உள்ளது.
புதிதாக அரசியலில் களம் காண உள்ள தமிழக வெற்றிக் கழகம் மற்றும் ஒரு அணியாக செயல்பட உள்ளது.
நாம் தமிழர் கட்சி
தேமுதிக
பாமக
கட்சிகள் எந்த கூட்டணியில் இணையலாம் என்ற தீவிர ஆலோசனை ஈடுபட்டு களப்பணி ஆற்ற காத்துக் கொண்டிருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க முன்னணி ஊடகங்கள் மற்றும் கருத்து கணிப்பு நிறுவனங்கள் தங்களது கருத்து கணிப்புகளை தொடங்கியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியில் எந்த கட்சிகள் எத்தனை இடத்தை பிடிக்கும் என்று மூத்த பத்திரிக்கையாளர் வம்சி சந்திரன் தனது எக்ஸ் தளத்தில் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளார்.
தற்போது இருக்கும் அரசியல் நிலவரப்படி
திமுக 154 இடங்களில் வெற்றி பெறும் எனவும் அதில்
126 இடங்களில் உறுதியாக வெற்றி பெற எனவும் 28 இடங்களில் இழுபறியோடு வெற்றி பெறும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணி 80 இடங்களில் முன்னிலை பெற்று 48 இடங்களில் வெற்றி பெறும் எனவும் மீதமுள்ள 32 தொகுதிகளில் இழுபறியோடு இறுதியாக 80 தொகுதியில் வெற்றி பெறும் எனவும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகம் எத்தனை இடத்தில் வெற்றி பெறும் என்று வம்சி சந்திரன் தனது கருத்துக்கணிப்பில் தெரிவிக்கவில்லை
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியே அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் உடனுக்குடன் தகவல் அறிய இணைந்து கொள்ளுங்கள்:
https://chat.whatsapp.com/KX0Sw5TaOfA1Qrr98zCvRe


Comments
Post a Comment