ஜி எஸ் டி வரி குறைப்பு, பல பொருட்களின் விலை குறைகிறது.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் விலை குறைய கூடிய பட்டியல் வெளியாகியுள்ளது.
ஜி எஸ் டி வரியில் முக்கிய திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும் எதிர்வரும் தீபாவளிக்கு மக்களுக்கு பரிசு காத்திருப்பதாகவும் பிரதமர் மோடி ஏற்கனவே சுதந்திர தின விழாவில் கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய நிதி அமச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
5,12,18,28 என நான்கு அடுக்கு முறையில் இருந்த ஜிஎஸ்டி இரண்டு அடுக்கு முறையில் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல பொருட்களின் விலை அதிரடியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் எதிர் வருகிற 22ஆம் தேதி முதல் இந்த ஜிஎஸ்டி முறை அமலுக்கு வருவதாகவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூறியுள்ளது.
கல்வி சார்ந்த பொருட்கள் பென்சில் எரேசர் நோட்டு புத்தகம் போன்ற பொருட்களுக்கு 12 இலிருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உணவு பொருட்கள் பிரட் போன்ற பொருட்களுக்கும் 12ல் இருந்து 5% ஆக ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட உளளது.
350 சிசிக்கு குறைவாக உள்ள இருசக்கர வாகனங்களுக்கு 28% இருந்த ஜிஎஸ்டி தற்பொழுது 18% குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது.
எலக்ட்ரிக் கார் மற்றும் இதர கார்கள் 28% சதவீதத்தில் இருந்த ஜிஎஸ்டி தற்போது 18% சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
Health care sector-யில் ஜிஎஸ்டி ஜீரோ சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்த் கேர் இன்சூரன்ஸ்யின் ஜிஎஸ்டி ஜீரோ சகீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சொகுசு கார்கள் தனிநபர் விமானங்களுக்கு 40% சதவீதமாக அதிகரித்துள்ளது.
புகையிலை பான் மசாலா ஆகியவற்றிற்கும் 40% சதவிதமாக அதிகரித்துள்ளது.
ஐபிஎல் மேட்ச் டிக்கெட்டின் விலை 40% சதவீதமாக
அதிகரித்துள்ளது.

Comments
Post a Comment